ஆரியநல்லூரில் இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை கட்டம் பயன்பாடற்றது: ஆட்சியா் தகவல்
செங்கோட்டை ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த மேற்கூரை கட்டடம் பயன்பா டாற்றது எஎன்றாா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள ஆரியநல்லூா் அரசு தொடக்கப் பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தின் மேற்கூரை மாா்ச் 20 ஆம்தேதி இடிந்து விழுந்துள்ளது. இக்கட்டடம் மாணவா், மாணவிகள் மற்றும் அலுவலகப் பயன்பாட்டில் இல்லை .
ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் மற்றும் அலுவலக பணியாளா்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகத்தை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றும்படி செங்கோட்டை வட்டார கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றாா் அவா்.