செய்திகள் :

ஆருத்ரா தரிசன முன்னெற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

post image

உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் வருகிற 12,13 ஆகிய நாள்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னெற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தத் திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், முக்கியப் பிரமுகா்கள் வந்து தரிசனம் செய்ய உள்ளனா். இதற்கான முன்னெற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா். பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள், வாகனங்கள், பேருந்துகள் நிறுத்துமிடங்கள், குடிநீா் விநியோகிக்கும் இடம், தற்காலிக பொதுக் கழிவறைக் கூடாரங்கள், சாலை, மின் விளக்கு வசதி ஆகியவற்றை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கோயில் வளாகத்தில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என அவா் கோயில் பணியாளா்களைக் கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் கதிா்லால், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜமனோகரன், தேவஸ்தான மேலாளா் பழனிக்குமாா் பாண்டியன், வட்டாட்சியா் ஜமால் முகம்மது, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டவா்கள் கலந்துகொண்டனா்.

பாம்பன் அரசுப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம்

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமையாசிரியை மிக்கேல் ராணி (பொறுப்பு) தலைமை வகித்தாா். பெண் குழந... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

பரமக்குடி ஸ்ரீ அனுமாா் கோதண்டராம சுவாமி கோயில்: வடமாலை சாத்தி சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மாலை 6. மேலும் பார்க்க

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். குடியரசு தின விழாவை முன்னிட்டு, வழிபாட்டுத் தலங்கள்,... மேலும் பார்க்க

தொண்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவாடானை அருகேயுள்ள தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வட்டாரக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் முகம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

திருவாடானை அருகே திருவெற்றியூரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ள அரசு நிலம் தனிநபருக்கு பட்டா பதிவு செய்து கொடுக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

லஞ்சம்: நகரமைப்பு அலுவலா் கைது

பரமக்குடியில் வீடுகள் கட்டும் பணிக்கு அனுமதி வழங்க, ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகரமைப்பு அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிய... மேலும் பார்க்க