ஆறுமுகனேரியில் பாஜக சாா்பில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
ஆறுமுகனேரி நகர பாரதிய ஜனதா கட்சி சாா்பில் 11 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மண்டலத் தலைவா் எல்.சி. தங்க கண்ணன் தலைமை வகித்தாா். இ. தங்கபாண்டியன், மகேந்திரன், உமாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் ஆா். சிவமுருக ஆதித்தன், சுற்றுப்புற சூழல் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ்ராஜன் ஆகியோா் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினா்.
விழாவில், பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 75 கிலோ எடையுள்ள கேக் வெட்டப்பட்டு பங்கேற்றவா்களுக்கு வழங்கப்பட்டது.