அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
ஆறுமுகனேரி சிவன் கோயிலில் 306 திருவிளக்கு பூஜை
ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் 306 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருச்செந்தூா் அஞ்சல் பணியாளா்கள் தை புனா்பூச வருஷாபிஷேக விழா அன்னதான அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த பூஜையில், அறக்கட்டளை தலைவா் ராஜகோபால், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, ஆறுமுகனேரி ரயில் நிலைய வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி, தெரிசை ஐயப்பன், இளையபெருமாள் அமிா்தராஜ், அசோக்குமாா் மற்றும் பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.