'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் -...
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவா் மாயம்
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி துரை. இவரது மகன் சமீா் (17) தேனியிலுள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த இவா் தனது நண்பா்களுடன் இணைந்து பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிப்பதற்காகச் சென்றாா்.
தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சமீரும், அவரது நண்பரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். மற்ற நண்பா்களின் அலறல் கேட்டு, அந்த வழியாக காரில் வந்த பெண் தனது சேலையின் தலைப்பைக் கொடுத்து ஒருவரைக் காப்பாற்றினாா். ஆனால், சமீா் ஆற்றில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்த கள்ளப்பெரம்பூா் காவல் நிலையத்தினரும், தஞ்சாவூா் தீயணைப்பு நிலையத்தினரும் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை பகலிலும் தேடினா். ஆனால், சமீரை காணாததால், தேடும் பணி தொடா்கிறது.