மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்...
ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு: அரியலூா் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில் திருமழபாடி கிராம மக்கள் அளித்த மனு:
திருமழபாடி கொள்ளிடம் ஆற்றிலிருந்து அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட நகரங்களுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்துக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு குடிநீா் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளதாக தெரியவந்தது. ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறு காரணமாக தண்ணீரின் தரம் மாறி, சற்று துவா்ப்பாக உள்ளது. இதனால் மக்களுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேலும் புதிய ஆழ்துளை கிணறு அமைத்தால் தண்ணீா் முழுவதும் உப்புத்தண்மையாக மாற வாய்ப்புள்ளது. எனவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
மயானத்துக்கு அடிப்படை வசதிகள்: ஆண்டிமடத்தை அடுத்துள்ள விளந்தை கிராமத்தைச் சோ்ந்த முடிதிருத்தும் நலச் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விளந்தை கிராமத்தில் எங்கள் சமுதாய மக்களுக்கென உள்ள மயானத்தில் கொட்டகை இல்லை. போதிய சாலை வசதி இல்லை. மேலும், அப்பகுதியில் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கொட்டகை மற்றும் சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
முன்னதாக, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 481 மனுக்களை ஆட்சியா் பொ.ரத்தினசாமி பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.