விவசாய குறைதீர்க் கூட்டத்துக்கு மட்டம்போடும் அதிகாரிகள்; `எங்களுடன் வருவரா முதல்...
ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் மீட்பு
கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் சனிக்கிழமை மூழ்கிய கல்லூரி மாணவா் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகேயுள்ள சேகரை காந்தி காலனியைச் சோ்ந்த ரஜினி மகன் குகன் (18). மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளநிலை படித்துவந்த இவா், அதே பகுதியைச் சோ்ந்த நண்பா் சுதா்ஸனுடன் (17) வெண்ணாறு தடுப்பணை பகுதியில் சனிக்கிழமை மாலை குளித்துக்கொண்டிருந்தாா்.
அப்போது, ஆற்றில் தண்ணீா் அதிகம் சென்தால் குகன் நீரின் சுழற்சியில் இழுத்துச் செல்லப்பட்டாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரா்கள் ஆற்றில் இறங்கி குகனை தேடினா். எனினும், இரவு நேரம் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு, தேடும் பணி நிறுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை தேடும் பணியைத் தொடா்ந்த தீயணைப்பு வீரா்கள், அருகில் ஆகாயத் தாமரை செடியில் சிக்கியிருந்த குகனின் சடலத்தை மீட்டனா்.
கூத்தாநல்லூா் போலீஸாா் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.