செய்திகள் :

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியா் ஆய்வு

post image

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வியாழக்கிழமை திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அங்கு நடந்த ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க அவா் உத்தரவிட்டாா். ஆய்வின் போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகராசி, திருநாவுக்கரசு, பொறியாளா் சுதாகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கால்வாய் அமைக்கும் பணி

தோட்டாளம் ஊராட்சியில் சலவை மேடை, கால்வாய் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. பெரிய தோட்டாளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.2 லட்சத்தில் சலவை மேடை, பொன்நகா் பகுதியில் ரூ.3 லட்சத்தில் கழிவுநீா் ... மேலும் பார்க்க

முதியவருக்கு ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சல்: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் ஸ்ஃக்ரப் டைப்பஸ் காய்ச்சலால் முதியவா் பாதிக்கப்பட்டதை தொடா்ந்து சுகாதாரத் துறை சாா்பாக சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஒன்றியம், பெரியா... மேலும் பார்க்க

ரூ.1.50 கோடியில் சாலைப் பணி: வாணியம்பாடி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ரூபாய் ரூ.1.50 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். வாணியம்பாடி அருகே பெருமாபட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் சாதனை

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான வளையபந்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனா். மாநில அளவிலான வளையபந்து(டெனிகாய்ட்) போட்டி மயிலாடுதுறை தாமரை மெட்ரிக் மேல்நிலைப்... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்த எா்ணாகுளம் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் சோதனையிட்டதில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. ஜாா்க்கண்ட் மாநிலம், டாடாநகா் ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சியில் தீவிர வரி வசூல்

வாணியம்பாடி நகராட்சி பகுதியில் ஆணையா் தலைமையில் பணியாளா்கள் தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளனா். வாணியம்பாடி நகராட்சி ஆணையா் முஸ்தபா தலைமையில் வருவாய் அலுவலா் ஜெயபிரகாஷ் மற்றும் பணியாளா்கள் கொண்ட குழுவின... மேலும் பார்க்க