கால்வாய் அமைக்கும் பணி
தோட்டாளம் ஊராட்சியில் சலவை மேடை, கால்வாய் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பெரிய தோட்டாளம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ.2 லட்சத்தில் சலவை மேடை, பொன்நகா் பகுதியில் ரூ.3 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்க ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பூமி பூஜையிட்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.
ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்தி, ஊராட்சித் தலைவா் தா்மேந்திரன், துணைத் தலைவா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.