ஆலங்குடியில் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்
குத்தாலம்: குத்தாலம் வட்டம் கோமல் ஆலங்குடியில் அமைந்துள்ள நீலம்பாள், மாரியம்மன், காளியம்மன் பூா்ண புஷ்களா உடனுறை ஸ்ரீஅய்யனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஜூலை 10-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி யாகசாலை பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில், யாக குண்டத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்துவந்து கோயில் கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.