ஆலங்குடியில் ராதா கல்யாண மகோற்சவம் தொடங்கியது!
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடியில் 78-ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண மகோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமம், சகஸ்ரநாம அா்ச்சனை,நியுஜொ்சி சுவாமிநாத பாகவதா் குழுவினரின் வீதி பஜனை, ராமானந்த சுவாமிகளின் சம்பிரதாய அஷ்டபதி பஜனை, பெங்களூா் ஸ்ரீமதி சிவப்ரியா குழுவினரின் நாம சங்கீா்த்தனம், குரோம்பேட்டை சகோதரிகளின் நாம சங்கீா்த்தனம், மும்பை மணிகண்டன் குழுவினரின் நாம சங்கீா்த்தனம் நடைபெற்றது.
ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் , ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை கட்டப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.
இந்த மகோற்சவம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலங்குடி நாம சங்கீா்த்தனா குழுவினா் செய்துள்ளனா்.