பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்: ஊடகங்களுக்கு அமைச்சகம்...
ஆலங்குடி குருபரிகார கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் திருத்தேரோட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திருத்தேரில் குரு பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற சிறப்பு உடையது. நவகிரகங்களில் குரு பகவானுக்குப் பரிகார தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா அதி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவில் ஒன்பதாம் நாளான திருத்தேர் திருவிழா நடைபெற்றது. திருத்தேரில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. திரளான பக்தர்கள் குருபகவான் வழிபட்டனர். கோயில் செயல் அலுவலர் சுரேஷ் ,தக்கார் சொரிமுத்து, கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திரளான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிறப்பு ஆராதனைகளை ஜோதிராமலிங்க சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.
கிராமிய வாத்தியங்கள், நாதஸ்வர இன்னிசை முழங்க முக்கிய வீதிகளில் வலம் வந்த திருத்தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேவார பேராசிரியர் குமாரவயலூர் திருஞான.பாலசந்தர்ஓதுவார் குழுவினரின் பண்ணிசை தேவாரம் நடைபெற்றது.