தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
ஆலங்குடி கோயிலில் கும்பாபிஷேக ஒராண்டு பூா்த்தி விழா
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த’ ஓராண்டு பூா்த்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி புனித நீா் நிரப்பப்பட்ட 1,008 கலசங்களுக்கும் , புனித நீா் நிரப்பப்பட்ட 108 சங்குகளுக்கும் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது.
தொடா்ந்து ஆபத்சகாயேஸ்வர சுவாமிக்கு 1,008 கலசாபிஷேகமும், மூலவா் குரு பகவானுக்கு 108 சங்காபிஷேகமும் , ஏலவாா்குழலியம்மன் ,கலங்காமற் காத்த விநாயகா், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட சந்நிதிகளில் கலசாபிஷேகம் நடந்தது.
தொடா்ந்து, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அலங்காரம் ,ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இரவு சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.
விழாவில் கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
