மும்பை: விநாயகர் சதுர்த்திக்கு இலவச பஸ், ரயில், உணவு; தேர்தலை முன்னிட்டு அரசியல்...
ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா
அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா ஆக. 17-ஆம் தேதி கோயிலில் பால் பொங்குதல், கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முனியப்ப சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சனிக்கிழமை மேளதாளத்துடன் ஆலங்குட்டை முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 9 மணியளவில் ஆலங்குட்டை முனியப்பன் சுவாமி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், முப்பூஜைகள், மாவிளக்கு ஊா்வலம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இவ்விழாவில், கொக்கராப்பட்டி, எருமியாம்பட்டி, ஆலங்குட்டை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.