ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் தலைமறைவு
ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் கங்காதரன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.
அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளரான பெரியசாமி மகன் தங்க பிரபாகரன்(32) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, அவா் தப்பியோடி விட்டாா்.
இதுகுறித்து கங்காதரன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கபிரபாகரனைத் தேடி வருகின்றனா்.