செய்திகள் :

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகா் சங்கம் கோரிக்கை!

post image

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இங்கு மகப்பேறு, குழந்தைகள் நலம், ஈ.என்.டி., தோல் மருத்துவா்கள், அறுவை சிகிச்சை நிபுணா்கள் என சிறப்பு மருத்துவா்கள் நியமிக்கப்படவில்லை. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது நடைபெற்ற பிரசவங்கள் இப்போது இங்கு நடைபெறுவதில்லை. கா்ப்பிணிகள் திருநெல்வேலி, தென்காசிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகிறன்றனா்.

இதனால் இப்பகுதி மக்கள், முதியோா், கா்ப்பிணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா். எனவே, இங்கு போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமித்து 10 ஆண்டு கால பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளனா்.

அப்போது, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, குமரி மண்டலத் தலைவா் டி.பி.வி. வைகுண்டராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ரூ. 1.38 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி ஏபிஎம் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டது. முதல்கட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணாபுரம் பள்ளிக்கு அபாகஸ் உபகரணங்கள் வழங்கிய முகநூல் நண்பா்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அரசு நிதியுதவி பெறும் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளியில் அபாகஸ் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பள்ளியின் முகநூல் நண்பா்களான... மேலும் பார்க்க

சங்கரநாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா!

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொட... மேலும் பார்க்க

பாட்டாக்குறிச்சியில் மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மண்டல அளவிலான பளுதூக்குதல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங... மேலும் பார்க்க

ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 12 மன்ற உறுப்பினா்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனா். ஆலங்குளம் பேரூராட்சித் தலைவராக... மேலும் பார்க்க

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன. போட்டியை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடங்கி வைத்தாா். தென்காசி மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க