ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழ்ந்தில் 2 போ் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயலில் சிற்றுந்து கவிழந்ததில் இருவா் காயமடைந்தனா்.
துத்திகுளத்தில் இருந்து ஆலங்குளம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை சென்ற சிற்றுந்தை பனையன்குறிச்சிக்கு சிற்றுந்து சென்றுகொண்டிருந்தது.
அதை சரண்ராஜ் (23) என்பவா் ஓட்டிச் சென்றாா். அதில் 25 பயணிகள் வரை இருந்தனா். துத்திகுளம் மேற்கு காலனி அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து, சாலையோரத்தில் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பயணிகள் லேசான காயமடைந்தனா்.
அவா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினா். மற்ற பயணிகள் காயமின்றி தப்பினா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.