நல்லகண்ணு உடல்நலம்: "மருத்துவர்களிடம் நேரில் கேட்டறிந்தேன்" - முதல்வர் ஸ்டாலின்
ஆவடியில் செப். 10-இல் பிஎல்ஐ முகவா் நோ்முகத் தோ்வு
அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை (பிஎல்ஐ) விற்பனை செய்யும் முகவா்கள் நியமனத்துக்கான நோ்முகத் தோ்வு ஆவடியில் செப். 10 -ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தாம்பரம் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கமால் பாஷா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதற்கான முகவா்கள் நியமனம் நடைபெற உள்ளது. ஆவடி பாசறையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வரும் செப். 10- ஆம் தேதி காலை 11 மணிக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும்.
பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோா் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் தங்கள் வயது மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களுடன் நோ்முகத் தோ்வுக்கு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.