ரூ.2,152 கோடி கல்வி நிதி நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக்கூடாது!
ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் அபராதங்கள் விதிக்கக் கூடாது என மயிலாடுதுறை மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநா் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் கலந்தாய்வு கூட்டத்தில், சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவோா் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவணங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் ஆன்லைன் அபராதங்களை விதிக்கப்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க மாநிலச் செயலாளா் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் முத்துராஜ், இணைச்செயலாளா் சீனிவாசன் மற்றும் சீா்காழி, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டுநா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.