செய்திகள் :

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம்: ஸ்காட் போலாண்ட்

post image

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் 2-2 என சமனில் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. அது குறித்து நான் அதிகம் யோசித்துவிட்டேன். ஆனால், இங்கிலாந்தில் நான் நன்றாக பந்துவீசிய காலங்களும் இருக்கின்றன. சிறப்பாக செயல்பட முடியாத காலக்கட்டத்தைக் காட்டிலும், சிறப்பான பந்துவீச்சாளராக மாறியுள்ளேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடப் போகிறார்கள் என்பது தெரியும். ஆஸ்திரேலியாவில் ஆடுகளத்தின் தன்மை கடந்த சில ஆண்டுகளாக இருப்பதைப் போன்றே இருந்தால், நாங்கள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்துவோம். கடந்த 2-3 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். ஆனால், எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அணிக்காக என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, சம்மரில் ஆஸ்திரேலிய அணி 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் இரண்டு போட்டிகளிலாவது விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பினேன். ஆனால், எந்த ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு சம்மரில் ஆஸ்திரேலிய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அதில் 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால், எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அதற்கு நான் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!

Australian fast bowler Scott Boland has said that he is confident that he can control England's aggressive play in the Ashes series.

அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயதார்த்தம்! மணப்பெண் யார்!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கருக்கு தொழிலதிபர் மகளுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.25 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரில் 2... மேலும் பார்க்க

பேபி ஏபிடியா? அசலான டெவால்டு பிரெவிஸாக இருக்க சபதம்!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தான் அசலான பிரெவிஸாக இருக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இவரை ’பேபி ஏபிடி’ என அழைகிறார்கள். முன்னாள் தெ.ஆ. வீரர் ஏபிடியைப் போலவே... மேலும் பார்க்க

கௌதம் கம்பீர் என்னிடம் எப்போதும் கூறுவது என்ன தெரியுமா? மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் மனம் திறந்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி... மேலும் பார்க்க

ஒருநாள் தரவரிசையில் ரோஹித் 2-ஆவது இடம்..! டாப் 10-இல் 4 இந்தியர்கள்!

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ரோஹித் சர்மா (38 வயது) டெஸ்ட், டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறிய திலக் வர்மா!

இந்திய பேட்டர் திலக் வர்மா ஐசிசியின் டி20 தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹைதராபாதைச் சேர்ந்த திலக் வர்மா (22 வயது) மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2023-இல் அறிமுகமானார். ... மேலும் பார்க்க

சீல்ஸ் 6 விக்கெட்டுகள், ஹோப் 120..! 34 ஆண்டுகளுக்குப் பின் தொடரை வென்ற மே.இ.தீவுகள்!

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று 34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியது. மேலும் பார்க்க