ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில், டி20 தொடர் நாளை மறுநாள் (ஜூலை 20) தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
16 பேர் கொண்ட அணியை சாய் ஹோப் கேப்டனாக வழிநடத்துகிறார்.
Squad Locked In!
— Windies Cricket (@windiescricket) July 16, 2025
The maroon firepower is ready to light up the T20Is against Australia! #WIvAUS | #FullAhEnergypic.twitter.com/5K4hYuxbsn
டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்
சாய் ஹோப் (கேப்டன்), ஜுவல் ஆண்ட்ரூ, ஜெடியா பிளேட்ஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரான் ஹெட்மேயர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், எவின் லீவிஸ், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பௌவல், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ரோமாரியோ ஷெப்பர்டு.
The West Indies Cricket Board has announced the squad for the T20 series against Australia.
இதையும் படிக்க: முத்தரப்பு டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் விலகல்!