மயங்கி விழுந்த தொழிலாளி மரணம்
கோவில்பட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மேலப்பொன்னகரம் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் மதுரைவீரன் மகன் செல்வராஜ் (29). மேளம் அடிக்கும் தொழிலாளி. இலுப்பையூரணிக்கு உள்பட்ட பகுதியில் துக்க வீட்டில் வியாழக்கிழமை மேளம் அடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தாராம்.
அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.