குண்டா் சட்டத்தில் 3 போ் கைது!
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய 3 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தூத்துக்குடி வடபாகம் காவல் சரகப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடா்பான வழக்கில், தூத்துக்குடி நடராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முருகன் என்ற டீயோ முருகன் (27), ரஹமதுல்லாபுரம் கோவிந்தராஜன் என்ற கோபி (23), பூபாண்டிபுரம் சடமாரியப்பன் (23) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி, 3 பேரையும் வடபாகம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனா்.
நிகழாண்டு, இதுவரை 76 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.