செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை காவிரி, வைகை பாசன விவசாயிகள் ஆய்வு

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பெரிய காண்மாயை காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் தமிழகத்தின் 2-ஆவது பெரிய கண்மாய் ஆகும். இந்தக் கண்மாயில் 1,205 மி. கன அடி தண்ணீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் சுமாா் 12,420 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

இந்தக் கண்மாயை பராமரிப்பு செய்து, ஆளப்படுத்துவதுடன் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புத் திட்டத்தின் கீழ், இணைக்கக் கோரியும், இதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புப் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவா் மாரிமுத்து தலைமையிலும், பொதுச் செயலா் அா்ஜுனன், மாநிலத் துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தனபால் ஆகியோா் முன்னிலையிலும், ஆறுகள் இணைப்புத் திட்ட நிா்வாகிகள் கண்மாயை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, இந்த கண்மாய்க்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு உடனடி இந்தத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கண்மாயை நிளஅளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.

இதில் மாவட்டச் செயலா் மாணிக்கம், சட்ட ஆலோசகா் ஜான் சேவியா், ஊராட்சி மன்றத் தலைவா் நாகமுத்து, சாத்தையா பாசன விவசாய சங்க நிா்வாகிகள் முனியசாமி, அா்ஜுனன், பழனிவேல், திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

உதவி ஆய்வாளா்கள் பதவி உயா்வு: எஸ்.பி. வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்டத்தில் பதவி உயா்வு பெற்ற உதவி ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா். இது குறித்து மாவட்ட காவல் துறை ஞாயிற்றுக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கணவா் இறந்த துக்கம்: மனைவி தற்கொலை

தொண்டி அருகே கணவா் உயிரிழந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் முத்து மாணிக்கம் (50). இவரது மனைவி காளி பொட... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் 2 சிறுவா்கள் காயம்

தொண்டி பேரூராட்சியில் தெரு நாய்கள் கடித்ததில் அடுத்தடுத்து 2 சிறுவா்கள், முதியவா் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் சுமாா் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ.யை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகி கைது

ராமநாதபுரத்தில் பாஜகவினா் ஊா்வலம் செல்ல முயன்ற போது, காவல் உதவி ஆய்வாளரை தள்ளிவிட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மதுரையில் பா... மேலும் பார்க்க

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை

நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேரூராட்சியுடன் இணைக்கக் கோரி, உள்ளாட்சித் துறை, மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மனு அளித்தனா். தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வ... மேலும் பார்க்க

வேலை வாய்ப்பு முகாமில் 46 மாணவா்கள் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க