ஓம் சிவோஹம்... இளையராஜாவின் இசைக்கு பிரதமர் மோடி எழுந்து நின்று பாராட்டு!
இங்கிலாந்து: திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படக் காட்சி நிறுத்தம்: என்ன நடந்தது?
பவன் கல்யாண் நடித்த வரலாற்று காவிய திரைப்படமான ஹரி ஹர வீர மல்லு ஜூலை 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் அவரது ரசிகர் பட்டாளத்தால் பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில், யுகேயில் ஒரு திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்து, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமூக வலைதளத்தில் ஒரு பயனர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்தின் ஒரு காட்சியின் போது, தியேட்டர் ஊழியர்கள் பார்வையாளர்களிடம் பேசும் காட்சி பதிவாகியுள்ளது.

சில பார்வையாளர்கள் திரையரங்கில் காகிதத் துண்டுகளை வீசி குப்பைகளை உருவாக்கியதால், ஊழியர்கள் தலையிட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க படத்தை பாதியிலேயே நிறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17ஆம் நூற்றாண்டு முகலாய பேரரசில், கோல்கொண்டாவிலிருந்து டெல்லி வரை வீர மல்லு நடத்திய துணிச்சலான பயணத்தையும், புகழ்பெற்ற கோ-இ-நூர் வைரத்தை மீட்கும் அவரது முயற்சியையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பாபி தியோல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A group of people threw confetti during a screening of Hari Hara Veera Mallu in the UK, disrupting the show. The staff rightly stopped the film and called them out. This kind of hooliganism is unacceptable and deserves strong condemnation. pic.twitter.com/hPfXuPlLXj
— Meru (@MeruBhaiya) July 24, 2025