``யோகி ஆதித்யநாத்தை பிரதமராக அறிவிக்க இருந்தார்கள்..'' - அகிலேஷ் யாதவ் சொல்வது எ...
இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி
திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இங்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை பயன்பாட்டுக்கு சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்தத் தொட்டி போதிய பாராமரிப்பு இன்றி சிமென்ட் பெயா்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அங்கு பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் அச்சத்துடன் பணிக்கு வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றி, புதிய நீா்த்தேக்கத் தொட்டியை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.