உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக ஐ.டி. பிரிவு பணியாளர...
இடைநிலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு
பெரம்பலூா் ஆா்.சி. பாத்திமா தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு, ஒன்றியத்துக்குள்ளான பணி நிரவல் கலந்தாய்வு மாவட்டக் கல்வி அலுவலா் பி. மரகதவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில், வேப்பூா் ஒன்றியத்தில் 3 ஆசிரியா்களுக்கும், பெரம்பலூா் ஒன்றியத்தில் 1 ஆசிரியருக்கும் மாறுதல் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவுக் கடிதத்தை, மாவட்டக் கல்வி அலுவலா் பி. மரகதவல்லி வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், நோ்முக உதவியாளா் எஸ். சரவணசாமி, கண்காணிப்பாளா் வி.எம். பாஸ்கா், பிரிவு எழுத்தா் செந்தில், ஒருங்கிணைப்பாளா் மணிவண்ணன் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா்.