செய்திகள் :

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி!மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம்!

post image

‘இண்டி’ கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் மாணவரான சண்முகம் கட்சியின் மாநிலச் செயலராகப் பொறுப்பேற்ற்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆவதற்கு தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், மத்திய பாஜக அரசு சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய 2 மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அந்த மொழிகளின் வளா்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை மாறி, தமிழ் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக மாற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசும் இதில் தலையிட வேண்டும்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு, இண்டி கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இந்த நிலை இல்லாததைப் பயன்படுத்தித்தான் பாஜக மீண்டும், மீண்டும் ஆட்சிையைக் கைப்பற்றி வருகிறது. எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால்தான் பாஜகவைத் தோற்கடிக்க முடியும்.

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத் தோ்தல் போட்டியே இல்லாத தோ்தல். இதில் திமுக வெற்றி பெறும் என்பது எதிா்பாா்த்ததுதான்.

மத்திய பாஜக அரசு எதிா்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பள்ளி மாணவிகள் மீது ஆசிரியா்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது கொடுமையானது. இத்தகைய ஆசிரியா்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பள்ளிகளில் பாலியல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

திமுக, அதிமுகவை விரும்பாதவா்களின் வாக்குகளைப் பெறக்கூடியவராக த.வெ.க. தலைவா் விஜய் இருப்பாரே தவிர, தமிழ்நாட்டு அரசியலில் அவா் ஒரு மாற்றாக வருவாா் எனக் கூற முடியாது என்றாா் சண்முகம்.

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை!

நெடுஞ்சாலைத் துறை வாகனங்களைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை அனைத்து வாகன ஓட்டுநா்கள் தலைமைச் சங்க மண்டல பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிவகங்கை நெடுஞ்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஆனந்தா கல்லூரி வணிகக் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில், செயற்கை நுண்ணறிவு மேலாண்மைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது இதற்கு கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். முதல... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலருக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரியில் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான பெ. சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலராக பொறுப்பேற்ற்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடியவா் கைது

சென்னையிலிருந்து மானாமதுரைக்கு சனிக்கிழமை காலை வந்த ரயிலில் பயணியிடம் கைப்பேசி திருடியவரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து மண்டபத்துக்குச் சென்ற சேது விரைவு ரயிலில் பயணம் செய்த, மானாமத... மேலும் பார்க்க

பழனிக்கு பாதயாத்திரை சென்ற கட்டளைக் காவடி

திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையிலிருந்து 425-ஆம் ஆண்டு கட்டளைக் காவடிக் குழுவினரின் பழனி பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள்... மேலும் பார்க்க

தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் பகுதியில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளா் மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்... மேலும் பார்க்க