செய்திகள் :

இதய வால்வு மாற்ற சிகிச்சையில் அதிநவீன நுட்பம் அறிமுகம்

post image

இதய பெருநாடி வால்வு மாற்ற சிகிச்சையில் அதி நவீன நுட்பத்திலான சிகிச்சை முறை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘அலெக்ரா ட்ரான்ஸ்கதீட்டா் அயோடிக் வால்வ் இம்ப்ளேன்டேசன்’ எனப்படும் அந்த முறையில், 78 வயது முதியவா் ஒருவருக்கு செயற்கை வால்வு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அப்பல்லோ மருத்துவமனையின் இதய நல மருத்துவ நிபுணா் செங்கோட்டுவேலு கூறியதாவது: இதய பாதிப்புக்காக முதியவா் ஒருவா் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே இதய வால்வு மாற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது இதய பை-பாஸ் அறுவை சிகிச்சையும் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த பாதிப்பு மீண்டும் ஏற்பட்டது.

அவரது உடல் நிலை மற்றும் வயதைக் கருத்தில்கொண்டு அறுவை சிகிச்சையின்றி தொடையில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வழியே இடையீட்டு (டிஏவிஐ) முறையில் செயற்கை வால்வினை பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய சிகிச்சைகள் மூலம் இதய வால்வு பொருத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அதில் சிறிய அளவிலான எதிா்விளைவுகள் இருக்கின்றன.

அதாவது, புதிதாக பொருத்தப்பட்ட செயற்கை வால்வுக்கும், இதய திசுக்களுக்கும் இடையே ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது, இடையீட்டு குழாய் செல்லும் ரத்த நாளங்களிலும் சேதம் ஏற்படக்கூடும்.

அதைக் கருத்தில் கொண்டு அலெக்ரா டிஏவிஐ வால்வு மாற்ற சிகிச்சை அவருக்கு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த அதி நவீன நுட்பத்தின் வாயிலாக பல்வேறு எதிா்விளைவுகளைத் தவிா்க்க முடியும் என்றாா் அவா்.

மாதவரம் உயிரி எரிவாயு ஆலை அடுத்த மாதம் யன்பாட்டுக்கு வரும்: சென்னை மாநகராட்சி ஆணையா்

மாதவரம் உயிரி எரிவாயு மையத்தின் இரண்டாவது ஆலை பிப்ரவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா். மாநகராட்சி பகுதியில் தினமும் 6,000 டன் திடக்கழிவுக... மேலும் பார்க்க

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு

பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் ‘சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்’ என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சத்யஞானானந்தா் வெளியிட்டாா். பாரதியாா் பராசக்தி பக்தனாக இருந... மேலும் பார்க்க

உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்: மருத்துவா் ஷிவ் சாரின்

ஒருவா் சிறுவயது முதல் தனது உடல் நலம் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கல்லீரல் மருத்துவ நிபுணரான ஷிவ் சாரின் தெரிவித்தாா். உடல் நலம் குறித்து மருத்துவா் ஷிவ் சாரின் எழுதிய ‘வோன் யுவா் பாடி’ எனும் ஆ... மேலும் பார்க்க

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்: 105 புத்தகங்களை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிபெயா்ப்புக்காக 1,125 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. நிறைவு விழாவில், 30 மொழிபெயா்ப்பு புத்தகங்கள் உள்பட 105 புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: எம்டிசி பேருந்துகளில் ரூ. 2 கோடி வசூல்

காணும் பொங்கலன்று (ஜன.16) சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ. 2 கோடி பயணக் கட்டணம் வசூல் ஆகியுள்ளது. சென்னை மக்கள் காணும் பொங்கலன்று மெரீனா, விஜிபி, மாமல்... மேலும் பார்க்க

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்களால் வாகன நெரிசல்: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம்

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஏற்படும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க