செய்திகள் :

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் கோடி சூதாட்டம்..! ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை!

post image

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானிடம் அமலாக்கத்துறை விசாரணை விசாரித்து வருகிறது.

1எக்ஸ் பெட்டிங் எனும் சட்ட விரோதமான சூதாட்ட செயலியில் தொடர்பு இருப்பதாக இந்த விசாரணை நடைபெறுகிறது.

அமலாக்கத்துறை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தில்லியுள்ள இந்த அலுவலகத்திற்கு ஷிகர் தவான் காலையில் சென்றார்.

1எக்ஸ் பெட்டிங் செயலியை விளம்பரம் செய்தல், அதற்கான ஆதரவு தெரிவித்தல் தொடர்பாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரித்து வருகிறது.

ஏற்கெனவே, இது தொடர்பாக பல்வேறு பிரபலங்களை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. சமீபத்தில் ரெய்னாவிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டது.

1,524 சூதாட்ட செயலிகள் முடக்கம்

இந்தத் தடைச் செய்யப்பட்ட சூதாட்ட செயலியில் பலரும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்வதாலும் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சுமத்துகிறது.

22 கோடி இந்தியர்கள் விதவிதமான சூதாட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். அதில் பாதி (11 கோடி) பேர் தொடர்ச்சியாக ஈடுபடுவதாகவும் சமீபத்திய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்தியாவில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 8 லட்சம் கோடி) அளவுக்கு சூதாட்டம் நடைபெறுகிறதெனவும் இதன் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய அரசு கடந்த 2022 முதல் 2025 ஜூன் வரையில் 1,524 சூதாட்ட செயலிகளை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Enforcement Directorate (ED) on Thursday morning started questioning Indian cricketer Shikhar Dhawan in its ongoing money laundering probe connected to the alleged illegal 1xBet betting platform.

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

ஆசிய கோப்பைக்கான ஹார்திக் பாண்டியாவின் புதிய சிகையலங்காரம் வைரலாகி வருகிறது. ஆசிய கோப்பை டி20 போட்டிகள் வரும் செப்.9ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை டி20 போட... மேலும் பார்க்க