இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 ஆக உயர்ந்த கரோனா பாதிப்பு!
இந்தியாவில் ஒரே வாரத்தில் 164 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ல் உலகையே புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து இரண்டு வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கியது. இந்தியப் பொருளாதார நிதிநிலை பெருமளவில் சரிந்தது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளதையடுத்து, இந்தியாவில் கரோனா நிலைமையைச் சுகாதார அமைச்சகம் மதிப்பாய்வு செய்து வருகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவும் கோவிட்-19இன் புதிய ஓமைக்ரான் துணை மாறுபாடான ஜெஎன் 1 என்று கண்டறியப்பட்டுள்ளது.