தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக் கொலை!
இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதலும் போர்ப் பதற்றமும் நிலவி வரும்நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் பஞ்சாப் மாநிலம் அருகே எல்லை வழியாக இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர் ஒருவர் ஊடுருவ முயன்றார். இதனையடுத்து, அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்பேரில், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்கள் மீதோ பொதுமக்கள் மீதோ இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம், பொதுமக்களைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறது.