செய்திகள் :

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

post image

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து விளையாடவிருக்கும் ஆஸ்திரேலியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சாம் சான்ஸ்டாஸ், மெக்ஸ்வீனி ஆஸி. ஏ அணியில் இடம் பிடித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியா ஏ அணி 2 நான்குநாள் டெஸ்ட் போட்டியும் 3 ஒருநாள் போட்டியும் விளையாடவிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகள் லக்னௌவில் வரும் செப். 16-19, செப். 23-26 ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் முறையே செப்.30, அக்.3, அக்.5ஆம் தேதிகளிலும் நடைபெற இருக்கின்றன.

புதிய சவாலுக்குத் தயாராகும் இளம் ஆஸி. வீரர்கள்

பார்டர் - கவாஸ்கர் தொடர் 2026- 27க்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் மோதவிருப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

சாம் கான்ஸ்டாஸ் (19 வயது) மெக்ஸ்வீனி (26 வயது) டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி சரியாக விளையாடவில்லை.

இது குறித்து ஜார்ஜ் பெய்லி, “துணைக் கண்டத்தில் விளையாடுவது எங்களது வீரர்களுக்கு தனித்துவமான சவாலாகவும் பந்து, பேட்டிங்கில் புதிய திறமைகளை பயன்படுத்தவும் வாய்ப்பாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான அணி: சேவியர் பார்ட்லெட், கூப்பர் கன்னோலி, ஜாக் எட்வர்ட்ஸ், ஆரோன் ஹார்டி, கேம்பல் கெல்லவே, சாம் கான்ஸ்டாஸ், நாதன் மெக்ஸ்வீனி, லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, ஃபெர்கஸ் ஓ'நீல், ஆலிவர் பீக், ஜோஷ் பிலிப், கோரி ரோச்சிசியோலி, லியாம் ஸ்காட்.

ஒருநாள்போட்டிக்கான அணி: கூப்பர் கோனொலி, ஹாரி டிக்சன், ஜாக் எட்வர்ட்ஸ், சாம் எலியட், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, மெக்கன்சி ஹார்வி, டாட் மர்பி, தன்வீர் சங்கா, லியாம் ஸ்காட், லாச்சி ஷா, டாம் ஸ்ட்ரேக்கர், வில் சதர்லேண்ட், கால்லம் விட்லர்.

சமீபத்தில் ஆஸி. ஏ அணியில் 202 ரன்கள் குவித்த ஜேசன் சங்கா ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார்.

2-வது டெஸ்ட்: மாட் ஹென்றி 5 விக்கெட்டுகள்; 125 ரன்களுக்கு ஜிம்பாப்வே ஆட்டமிழப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி அதன் முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொ... மேலும் பார்க்க

ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ் வோக்ஸ்; எதற்காக?

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பை தொடரில் ரீ-எண்ட்ரி.! மீண்டும் இந்திய அணியில் ஷ்ரேயஸ்!

ஆசியக் கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர் ஷ்ரேயஸ் ஐயர் மீண்டும் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும்,... மேலும் பார்க்க

கவனக்குறைவாக விளையாடுவது பேஸ்பால் தத்துவமல்ல..! கிரேக் சேப்பல் விமர்சனம்!

ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் இங்கிலாந்தின் பேஸ்பால் கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியில் வென்று 2-2... மேலும் பார்க்க

ஆசியக் கோப்பைக்கு முன் டி20 அணிக்கு திரும்பும் ஷுப்மல் கில்! ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடந்து... மேலும் பார்க்க