செய்திகள் :

இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு

post image

ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் சிறந்த வர்த்தகம் நடைபெறப் போகிறது என அமெரிக்கா கூறிவந்தது. இப்போது அந்த இரு நாடுகள் மீதும் 500 சதவிகிதம் வரை வரி விதிக்க புதிய மசோதா ஒன்றை முன்மொழிந்துள்ளது. இது இருநாடுகளுக்கும் பேரிடியாக வந்திறங்கியுள்ளது.

ரஷியாவை பொருளாதார ரீதியில் தாக்கும் விதமாக அமெரிக்க இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் அதிகளவில் பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதுகுறித்து கிரஹாம் கூறுகையில், “ரஷியாவிடமிருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு, உக்ரைனுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவும், சீனாவும் ரஷிய அதிபர் புதினிடமிருந்து 70 சதவிகிதம் கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன” என்றார்.

ஒருவேளை கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் 500 சதவிகித வரி ஆகியவை இந்தியாவில் மருந்துகள், ஜவுளி, ஐடி சேவைகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ரஷியாவிலிருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவந்திருந்த இந்திய, சமீபத்திய ஆண்டுகளாக கிட்டத்தட்ட 49 பில்லியன் யூரோ வரை ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது.

குடியரசுக் கட்சியின் கிரஹாம் மற்றும் ஜனநாயகக் கட்சியின் எம்பி ரிச்சர்ட் புளூமெண்டால் வழங்கப்பட்ட இந்த மசோதாவுக்கு 84 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த மசோதா ஒருவேளை சட்டமாக மாறினால், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கக் கூடும். மேலும், இது மற்றொரு வர்த்தகப் போருக்கான துவக்கமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

A proposed US Senate bill, backed by President Donald Trump, could impose 500% tariffs on countries, including India and China, that continue trading with Russia, Republican Senator Lindsey Graham said in an interview.

இதையும் படிக்க... கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டியிருக்கும்! - மஸ்க்கிடம் டிரம்ப் கறார்

அமெரிக்க வரிச் சலுகை, குடியேற்ற மசோதா நிறைவேற்றம்: ஆதரவு 218; எதிா்ப்பு 214

அமெரிக்காவின் வரிச் சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்ற கீழவை ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையில் மசோதா நிறைவேறியதைத் தொடா்ந்து, இரு அவைகளிலும் மசோதா நிறைவே... மேலும் பார்க்க

ரஷியா தலிபான் அரசுக்கு அங்கீகாரம்

ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு அங்கீகாரம் அளித்துள்ள முதல் நாடாக ரஷியா ஆகியுள்ளது. தலிபான் ஆட்சியாளா்களால் நியமிக்கப்பட்ட புதிய தூதரை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த அங்கீகாரத்தை ரஷிய அரசு வழங்கியுள்ளது.... மேலும் பார்க்க

ஈரானில் மீண்டும் சா்வதேச விமானப் போக்குவரத்து

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான பதற்றம் காரணமாக ஈரானில் 20 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சா்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. டெஹ்ரானில் உள்ள இமாம் கோமேனி சா்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்... மேலும் பார்க்க

வாகனப் பொருள்கள் மீது கூடுதல் வரி: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்கிழமை தெ... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு இந்திய பதிலடி வரி

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி வதிப்புக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கவுள்ளதாக இந்தியா வெள்ளிக்க... மேலும் பார்க்க

நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவ... மேலும் பார்க்க