செய்திகள் :

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

post image

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப் உடனடியாக கையொப்பமிட்டாா்.

அதிபா் டிரம்பின் நடவடிக்கைக்கு அவா் சாா்ந்த குடியரசுத் கட்சியைச் சோ்ந்த தலைவரும், ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹேலி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷியா, ஈரானிடம் இருந்து அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா மீதான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைத்துவிட்டு இந்தியா மீது மட்டும் வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவைப் பகைத்துக் கொண்டு சீனாவுக்கு சலுகை வழங்கக் கூடாது. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டுமே தவிர சிதைக்கக் கூடாது’ என்று கூறியுள்ளாா்.

ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின்... மேலும் பார்க்க

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் படுகாயம்!

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் பற்றிக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆகஸ்ட் 9 ஆம் தே... மேலும் பார்க்க

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 47 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தானின் ஸோப் மாவட்டத்தின் சம்பாஸா நகரத்துக்கு அருகில், கட... மேலும் பார்க்க

நாட்டின் ஒரே தங்கச் சுரங்கமும் இனி தேசியமயம்! நைஜர் ராணுவ அரசு அதிரடி!

நைஜர் நாட்டை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு, அந்நாட்டிலுள்ள ஒரேயொரு தங்கச் சுரங்கத்தை, தேசியமயமாக்குவதாக அறிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சியின... மேலும் பார்க்க

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதலை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.அஜர்பைஜான் - ஆர்மீனியா இடையேயான நீண்டகால மோதலை முடிவுக்... மேலும் பார்க்க

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், 3 ஆண்டுகள... மேலும் பார்க்க