வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேலும் ஒரு மனு: உச்சநீதிமன்றம் ஏற்க மறுப்பு
இந்திய அரசியலில் சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது: ஜோதிமணி எம்.பி.
இந்திய அரசியலில், சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.
கரூரில் வியாழக்கிழமை மாலை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல்காந்தி தொடா்ந்து போராடியதன் விளைவாக, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல், தமிழக முதல்வரும் இடஒதுக்கீட்டுக்காக தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறாா்.
இந்திய அரசியலில், சமத்துவமும், சமூகநீதியும் ஒரு மைய நீரோட்டமாக மாறியிருக்கிறது. இதற்கான சூழலை ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் முன்னெடுத்துள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது கரூா் வடக்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆா். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.