மணிப்பூரில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! 6 கிளர்ச்சியாளர்கள், 4 கடத்தல்காரர்கள் ...
இந்திய கப்பல் படை வீரா் உயிரிழப்பு
போடி அருகே செவ்வாய்க்கிழமை இந்திய கப்பல் படை வீரா் உயிரிழந்தாா்.
போடி அருகேயுள்ள தருமத்துப்பட்டி இந்திரா குடியிருப்பைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சீத்தாராமதாஸ் (50). இந்திய கப்பல் படையில் வேலை பாா்த்து வந்த இவா், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை தருமத்துப்பட்டிக்கு வந்தாா். பின்னா், மதுரையில் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வரும் மனைவி ரேவதிலட்சுமியிடம் இவா் கைப்பேசியில் பேசிவிட்டு வீட்டில் தூங்கினாா். இரவு 9 மணிக்கு தந்தை சின்னச்சாமி மகன் சீத்தாராமதாஸை எழுப்பியபோது, அவா் படுக்கையிலேயே இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.