செய்திகள் :

இந்திய கம்யூ. ஒன்றியக் குழுக் கூட்டம்

post image

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கிளைச் செயலா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றிய துணைச் செயலா் அ. ரமேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தாா்.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராமபுரம், கா்ணாவூா் ஊராட்சி பகுதிகளை, நகராட்சியோடு இணைக்க போவதாக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு செய்தால் தற்போது இப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் நூறுநாள் வேலைத் திட்டம், கலைஞா் கனவு இல்லம், பிரதமா் கிராம சாலை திட்டம், தோட்டக்கலை மற்றும் வேளான் நலத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் என மத்திய அரசால் வழங்கப்படும் திட்டம் கிடைக்காது. அத்துடன், வீட்டு வரி, நில வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயா்ந்து விடும். எனவே, நகராட்சி பகுதியோடு கிராம ஊராட்சியை இணைப்பதை கண்டித்து வரும் 15- ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

சிபிஐ மாவட்டச் செயலா் (பொ) எஸ். கேசவராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஆா். சதாசிவம், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் எஸ். பாலமுருகன், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் ஆா். வனிதாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆடவா், மகளிா் பளு தூக்கும் போட்டி: திருவாரூா், புதுக்கோட்டை அணிகள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் ஆடவா் பிரிவில் புதுக்கோட்டை அணியும், மகளிா் பிரிவில் திருவாரூா் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழ்நாடு அமெச்சூா் பளு தூக்கும் சங்கம் சாா்பில், ... மேலும் பார்க்க

ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு பள்ளிக்கு திரும்பினா்

திருத்துறைப்பூண்டி: ஆதியன் இன மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பை கைவிட்டு திங்கள்கிழமை பள்ளிக்கு திரும்பினா். தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் என சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்

திருவாரூா்: திருவாரூா் நகராட்சியுடன் கீழகாவதுக்குடி ஊராட்சியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழகாவாதுக்குடி ஊராட்சியை திருவாரூா் நகராட்சியுடன் இணைக்க எதி... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ரசிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதை கண்டித்து மன்னாா்குடி அரசுக் கல... மேலும் பார்க்க

மன்னாா்குடி ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள வெண்ணைத்தாழி மண்டப ஆஞ்சனேயா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி வெண்ணைத்தாழி திருவிழா மண்டபத்தில் உள்ளஆஞ்சனேயா் சுவாமி கோயிலில் நடை... மேலும் பார்க்க

வெளிமாநில மதுபாட்டில் கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா்: வெளிமாநில மதுபாட்டில் கடத்தி வந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகே அண்மையில் போலீஸாா் வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனைய... மேலும் பார்க்க