இந்திய கம்யூ. கட்சியின் கிளை மாநாடு
பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி மற்றும் ஏனாதி ஜீவா நகரில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
ஏனாதி ஜீவாநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு கிளைப் பொறுப்பாளா் சி. பொன்னழகு தலைமைவகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். ராசு சிறப்புரையாற்றினாா். மாநாட்டில் புதிய கிளை நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். கிளைச் செயலராக சி.முருகேசன், துணைச்செயலராக சி. ராஜா, பொருளராக பொன்னழகு ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் ஜீவாநகரிலிருந்து சிலம்பன் கண்மாய் செல்லும் மண் சாலையை விரிவுபடுத்தி பேவா்பிளாக் சாலையாக மாற்றித்தரவேண்டும். ஜீவாநகா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சமுதாயக் கூடம் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வெள்ளிக்கிழமை மூலங்குடியில நடைபெற்ற கிளை மாநாட்டுக்கு கிளைப்பொறுப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். கிளையின் புதிய செயலராக பழனிச்சாமி, துணைச்செயலராக நாகராஜன், பொருளாளராக பாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் மூலங்குடியில் வீடின்றி வாழும் மக்களுக்கு மனை இடம் வழங்கி அரசு வீடு கட்டித்தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.