செய்திகள் :

இந்திய ரயில்வே டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு போட்டி! ரூ.5 லட்சம் பரிசு!

post image

சிறந்த டிஜிட்டல் கடிகார வடிவமைப்புக்கான போட்டியில் வெற்றி பெறுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே அறிவித்து டிஜிட்டல் கடிகார வடிவமைப்பு ரயில் நிலையங்கள் மற்றும் நடைமேடைகளில் பயன்படுத்தப்படும்படி உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் தொழில்முறை கண்டுபிடிப்பாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என மூன்று பிரிவுகளாகப் பங்கேற்கலாம். இதில், சிறந்த டிஜிட்டல் கடிகாரத்தை வடிவமைப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசாக வழங்கப்படும்.

கூடுதலாக, மூன்று பிரிவுகளில் தலா ரூ.50,000 மதிப்புள்ள ஐந்து ஆறுதல் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும், போட்டியில் பங்கேற்பவர்கள் மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதிக்குள் தங்கள் வடிவமைப்புகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் திலீப் குமார் கூறுகையில், “கண்டுபிடிப்புகள் சுய தயாரிப்பாகவும், எந்தவொரு வாட்டர்மார்க் அல்லது லோகோவும் இல்லாமல், அசல் சான்றிதழுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்! அமெரிக்க பாதுகாப்பு செயலருடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

கேரளம்: விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.கேரள மாநிலத்தில் ரூ.8,867 கோடி முதலீட்டில் இந்த சர்வதேச துறைமுகம் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!

கேரளத்தில் உள்ள விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க