செய்திகள் :

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்

post image

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், "சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துரையாடினார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டிராகன்’ விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அடைந்தார்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் அவர் 14 நாள்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறாா்.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தோ்வான வீரா்களில் ஒருவரான சுக்லா, அனுபவப் பயிற்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்குப் பயணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் அங்கிருந்து பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் கலந்துரையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The PM Narendra Modi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station.

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தொடருகிறது: இன்றைய பலி எண்ணிக்கை 49!

இந்தியாவைத் தவிர எந்த நாட்டின் அரசமைப்புச் சட்ட முகவுரையும் மாற்றப்படவில்லை: தன்கா்

‘அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்பது ஓா் வளரும் ஆவணத்தின் விதை போன்றது. அந்த வகையில், முகவுரை என்பது மாற்ற முடியாதது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.மேலும், ‘இந்தியாவைத் தவி... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றம் செய்தால் பிஎஸ்பி அனுமதிக்காது: மாயாவதி

அரசமைப்புச் சட்டத்தில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) அனுமதிக்காது என்று அக்கட்சியின் தலைவா் மாயாவதி தெரிவித்தாா். லக்னெளவில் செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம் ‘அரசமைப... மேலும் பார்க்க

மோடி அரசின் ‘அடக்குமுறை’ கொள்கையால் முதலீட்டு மந்தநிலை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பிரதமா் மோடி தலைமையிலான அரசின் ‘அடக்குமுறை’ கொள்கைகளின் விளைவாக முதலீட்டு மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக அக்கட்சியன் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இண... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியானவரின் கடைசி உடலும் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ் ஜோஷி கூறுகையில், ஏர் இந்... மேலும் பார்க்க

புரி ரத யாத்திரையில் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு!

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.பிரதான கோயிலி... மேலும் பார்க்க