செய்திகள் :

இனி, சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்!

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இரு தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் அயலி தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாகாது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாதங்களில் வரும் பண்டிகைகளுக்கு ஏற்ப தொடர்களிலும் திரைக்கதைகள் மாற்றி அமைக்கப்படுவதால், பெண்கள் பலரையும் இந்தத் தொடர்கள் கவர்ந்துள்ளன. தற்போது ஆடி மாதத் திருவிழா, அம்மன் வழிபாடுகளை மையப்படுத்தி தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.

அவ்வபோது, புதிய தொடர்களின் வருகை காரணமாக ஏற்கெனவே ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். இதேபோன்று, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கள் வாரத்தில் 5 நாள்களுக்கு பதில் 6 நாள்களாக ஒளிபரப்பப்படுவதும் வழக்கமானது.

அந்தவகையில் ஜீ தமிழின் அயலி மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய இரு தொடர்களும், இனி சனிக்கிழமையிலும் ஒளிபரப்பாகவுள்ளதாக தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், அயலி தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கும், கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

The time of two serials airing on Zee Tamil TV has been changed.

கோப்பையை தக்கவைத்தது இங்கிலாந்து!

மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்க... மேலும் பார்க்க

வரலாறு படைத்தாா் திவ்யா தேஷ்முக்! உலகக் கோப்பை வென்றாா்; கிராண்ட்மாஸ்டரும் ஆனாா்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டியில் சாம்பியனான முதல் இந்தியராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.இறுதிச்சு... மேலும் பார்க்க

லெய்லா, டி மினாா் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸும், ஆடவா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரும் சாம்பியன் கோப்பை வென்றனா்.இதில் ம... மேலும் பார்க்க

பந்த் வெளியே; ஜெகதீசன் உள்ளே

வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா். அவருக்கான மாற்று வீரராக தமிழகத்தின் என்.ஜெக... மேலும் பார்க்க

உலகக் கோப்பை செஸ்: திவ்யா, ஹம்பிக்கு மோடி வாழ்த்து!

மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியின் சாம்பியன் திவ்யா தேஷ்முக் மற்றும் இரண்டாமிடம் பிடித்த கோனெரு ஹம்பிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஜாா்ஜியாவில் நடைபெற்ற மகளிா் உலகக் கோப்பை செஸ... மேலும் பார்க்க