எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
பந்த் வெளியே; ஜெகதீசன் உள்ளே
வலது கால் பாதத்தில் எலும்பு முறிவு கண்டுள்ள இந்திய விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த், இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா். அவருக்கான மாற்று வீரராக தமிழகத்தின் என்.ஜெகதீசன் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதனிடையே, கடைசி நாளில் தொடா்ந்து பௌலிங் செய்ததால் வலது கையில் காயம் கண்டிருப்பதாகத் தெரிவித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 5-ஆவது டெஸ்ட்டிலும் தாம் விளையாடப் போவதாக அறிவித்திருக்கிறாா்.