பெண்ணிடம் நகையைப் பறித்தவரை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸாா்
இன்று அறிமுகமான `புதிய வருமான வரிச் சட்டம்!' -முக்கிய அம்சங்கள் என்னென்ன?!
கடந்த 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர், 'அடுத்த வாரம் புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும்' என்று கூறியது, இன்று நிறைவேறி இருக்கிறது.
இன்று நடந்த கூட்டத்தொடரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரிச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இது வெறும் அறிமுகப்படுத்தப்பட்டு தான் இருக்கிறதே தவிர, அமலுக்கு வரவில்லை. 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய சட்டத்தின் நோக்கமே எளிமைப்படுத்துதல் மற்றும் மக்களுக்கு எளிதாக புரிதல் ஆகும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/0qovgrbn/Screenshot-2025-02-13-171730.png)
இந்த சட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்கள்...
1. இந்த சட்டம் 622 பக்கங்களையும், 23 பிரிவுகளையும், 536 உட்பிரிவுகளையும் கொண்டிருக்கிறது. பழைய வருமான வரி சட்டத்தில் 298 உட்பிரிவுளையும், 23 பிரிவுகளையும், 823 பக்கங்களையும் கொண்டிருந்தது
2. இனி 'அசஸ்மென்ட் ஆண்டுகள்' என்ற ஒரு வார்த்தையே இருக்காது. அதற்கு பதில் 'வரி ஆண்டு' என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது இதுவரை வருமானம் சம்பாதித்த ஆண்டை 'முன் ஆண்டு' என்றும், அதன் வரி கணக்கிடப்படும் ஆண்டை 'அசஸ்மென்ட் ஆண்டு' என்றும் கூறுவர். இதனால், பல குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது.
இனி, புதிய வருமான வரிச் சட்டத்தின் படி, இரண்டு வார்த்தைகள் சொல்லப்படாது. வருமானம் சம்பாதிக்கும் ஆண்டை வெறும் 'வரி ஆண்டு' என்று குறிப்பிடப்படும்.
3. வருமான வரிச் சட்டம் 1961-ல் இருப்பதை தவிர, புதிதாக எந்தவொரு கூடுதல் வரியும் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
4. முன்பிருந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகளை எளிமைப்படுத்தப்பட்டு, இந்த சட்டத்தில் இடம்பெற்றுள்ளது.