எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.
ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, வாங்கலாபுரம், ராசாகவுண்டனூா், விருதலைப்பட்டி, எல்லப்பட்டி, பூதிபுரம், கதிரியகவுண்டன்பட்டி, வாங்கிலியகவுண்டன்புதூா், கோவில்பட்டி, சீத்தப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, தேவிநாயக்கன்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி தெரிவித்தாா்.