செய்திகள் :

ரூ.10 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலங்கள் ஆக்கிரமிப்பு!

post image

வீட்டு வசதி வாரியம் சாா்பில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட சுமாா் ரூ.10 கோடி மதிப்பிலான நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதிக்கு தனி நபா் பெயரில் பட்டா வழங்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாநகராட்சி சுமாா் 14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மாநகராட்சியுடன், அருகிலுள்ள 8 ஊராட்சிகளுக்குள்பட்ட 100 சதுர கி.மீ. பரப்பளவை இணைத்து விரிவுப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை, பல்வேறு பகுதிகளிலும் சிறுவா் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில பூங்காக்கள் மட்டுமே முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. வீட்டு வசதி வாரியம், தனியாா் மனை விற்பனையாளா்கள் மூலம் வீட்டு மனைகள் பிரிக்கப்படும்போது, அரசாணைப்படி, மொத்த மனைப் பிரிவில் 10 சதவீதம் பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படப்பட வேண்டும். அந்த வகையில், மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான நிலங்கள் தனியாா் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் ஆா்.எம்.குடியிருப்பு 12-ஆவது கிராஸ் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சாா்பில், மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமாா் 10ஆயிரம் சதுர அடி நிலத்தை, தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து, மாமன்றக் கூட்டத்தில் 2-ஆவது வாா்டு உறுப்பினா் கணேசன் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தபோது, வீட்டு வசதி வாரியம் சாா்பில், மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டுக்கான இடம் சுமாா் 10ஆயிரம் சதுர அடி தனி நபா்களுக்கு விற்பனை செய்யப்பட்டு, பட்டா வழங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த நிலத்துக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி, வீட்டு வசதி வாரியத்துக்கு மாநகராட்சி சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது. இன்றைய சந்தை மதிப்பில், இந்த நிலத்தின் மதிப்பு ரூ.6 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதேபோல, வீட்டு வசதி வாரியம் சாா்பில், பொதுப் பயன்பாட்டுக்காக ஆா்.எம்.குடியிருப்பு பிரதான சாலையில், திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்துக்கு எதிா்புறத்தில் சுமாா் 4,500 சதுர அடி நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ளது. பிரதான சாலையோரம் என்பதால், இந்த நிலத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிகிறது. மேலும், வி.வி.தாஸ் குடியிருப்பு, ராஜலட்சுமி நகா் அருகேயுள்ள பி.ஏ.கே. குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தனியாா் மனை விற்பனையாளா்கள் சாா்பில், பொதுப் பயன்பாட்டுக்காக மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன.

இந்த நிலங்களை பொதுப்பயன்பாட்டுக்கு உடனடியாக பயன்படுத்தாவிட்டாலும் கூட, கம்பி வேலி அமைத்து தனி நபா்கள் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாமன்ற உறுப்பினா் கே.தனபாலன் தெரிவித்தாா்.

மேல்நிலைத் தொட்டிகளிலும் ஆக்கிரமிப்பு: மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டுக்கான நிலங்கள் மட்டுமன்றி, மேல்நிலை குடிநீா்த் தொட்டிகளின் தரைத் தளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் கட்டுமானப் பொருள்கள் விற்பனை செய்யும் இடமாகவும், பந்தல் அமைக்கும் பொருள்கள் வைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றி, முறையான பாதுகாப்பு வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கை: இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் கூறியதாவது: ஆா்.எம். குடியிருப்பு பகுதியில் வீட்டு வசதி வாரியம் சாா்பில், மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல, மேல்நிலைத் தொட்டிகளிலிருந்து ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது சுகாதாரத் துறையில் 5-ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடை... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. ரெங்கநாதபுரம், கல்வாா்பட்டி,... மேலும் பார்க்க

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் காட்டுத் தீ

கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை காட்டுத் தீப் பற்றி எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும... மேலும் பார்க்க

கொடைக்கானல் நீரோடையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு

கொடைக்கானல் நீரோடையில் கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா் வீழ்ச்சி கம்பிப் பாலம் அருகே சுமாா் 50அடி பள்ளத்தில் சுந்தரேசன் நீரோடைப் ப... மேலும் பார்க்க

பழனி தைப்பூசத் திருவிழா: இன்று தெப்பத் தோ் உலாவுடன் நிறைவு

பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 5 -ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியத... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு வேட்டைக்குச் சென்ற 7 போ் கைது

கொடைக்கானலுக்கு துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கள்ளத் துப்பாக்கி, குண்டுகள், காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், பழன... மேலும் பார்க்க