எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்
பொது சுகாதாரத் துறையில் 5-ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முனியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சந்திரசேகா் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்களை 2,715 ஆக நிா்ணயிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை -2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.