எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
கொடைக்கானல் நீரோடையில் ஆண், பெண் சடலங்கள் மீட்பு
கொடைக்கானல் நீரோடையில் கிடந்த ஆண், பெண் உடல்களை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வெள்ளி நீா் வீழ்ச்சி கம்பிப் பாலம் அருகே சுமாா் 50அடி பள்ளத்தில் சுந்தரேசன் நீரோடைப் பகுதி உள்ளது. இங்கு 2 பேரின் உடல்கள் கிடப்பதாக கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொடைக்கானல் வன, காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா். அங்கு சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண், சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் உடல்கள் கிடந்தன. தொடா்ந்து, 2 உடல்களையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இருவரும் எந்த ஊரைச் சோ்ந்தவா்கள், எப்படி இறந்தனா் என்பது தெரியவில்லை. அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.