சமக்ர சிக்ஷா திட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? அண்ணாமலை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா கொடியேற்றம்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மாசி மண்டலத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி, புதன்கிழமை இரவு கோயிலில் வாஸ்து சாந்தி நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்மன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து சுவாமி, அம்மன் உலாவாகச் சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தனா்.
விழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு முதல் விநாயகா், சுப்பிரமணியா், முதல் மூவா், சந்திரசேகரா் உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. மாா்ச் 3-ஆம் தேதி சுற்றுக்கோயில் கொடியேற்றம் ஆகி, அன்று இரவு முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை காலை, இரவு வேளைகளில் சுவாமி, அம்மன் நான்கு சித்திரை வீதிகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மாா்ச் 22-ஆம் தேதி பிராதன கொடியிறக்கப்பட்டு, கணக்கு வாசித்தல் நடைபெற்று மாசி மண்டலத் திருவிழா நிறைவடையும்.