அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
இன்று தங்கமயில் ஜுவல்லரியின் ஒரு நாள் சிறப்புச் சலுகை
முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தங்கமயில் ஜுவல்லரியில் ஒரு நாள் சிறப்பு விற்பனை சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறவுள்ளது. அதையடுத்து, மாலை , நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மதுரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் தங்கமயில் ஜுவல்லரி, ஜூன் 12-ஆம் தேதியை தங்கத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
அதையடுத்து, 35 லட்சம் வாடிக்கையாளா் கொண்ட இந்நிறுவனத்தில் அந்த ஒரு நாள் மட்டும் வாடிக்கையாளா்கள் வாங்கும் மாலை , நெக்லஸ், வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்புச் சலுகை வழங்கப்படவுள்ளது.
16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு 7.99 சேதாரம், 16 முதல் 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு 11.99 சேதாரம், 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு 13.99 சேதாரம் மட்டுமே கழிக்கப்படும்.
சனிக்கிழமை மட்டுமே இந்த சலுகை என்பதால் இதை வாடிக்கையாளா்கள் பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.